Thursday, February 10, 2011

சொந்த ஊருக்கு போன கதை....

ஊருக்கு போய்விட்டு வந்து பார்த்தா.......ஒன்னுமே புரியல அய்யய்யோ பதிவு போட்டு ஒருமாசம் ஆகபோகுதே அப்படின்னு உக்காந்து யோசிச்சா....திடிர்னு ஒரு யோசனை ஏ நாம ஊருக்கு போன கதையா பதிவா போடலாம்னு முடிவை எடுத்து..........

வாங்க அப்படியேல்லாம் மொறைக்க பிடாது கதை சொன்னா கேக்கனும் சரியா,,,,

சரியான வண்டியை பிடிச்சி சார்ஜா......வந்து உள்ளே போனா....ஊரே அங்கதான் நிக்கிது.....வரிசையில ஊரபாக்கபோக....அம்புட்டு கூட்டம் ஒருவழியா நானும் எனது நண்பரும் சரியா கவுண்டருக்கு வந்து நின்னா....

அங்க இருந்த ஒரு அக்கா இப்படி சொல்லிச்சி........


சார் நீங்க ஒரு நாலு கிலோ கூடுதலாக (அள்ளிகிட்டு போரிங்க )எடுத்துகிட்டு போரிங்க sorry sir you have to pey for 4 kG அப்படின்னு அந்த அக்கா சொல்ல தூக்கி வாரி பொட்டுடிச்சி.....அக்கா பணத்தை கட்ரத தவிற வேற எதுவும் வழியே இல்லையா அப்படி கேட்டார் எனது நண்பர்.....

நான் வாயை வச்சுகிட்டு சும்மா இல்லாம அக்கா எங்கள பார்த்தா உங்களுக்கு பாவமா இல்லையான்னு கேட்டேன் அவ்வளவுதான்.....முடியவே முடியாதுன்னு பழையபடி no way what you think mmm..... ஜயோ அக்கா நீங்க கோவபட்டா நாங்க ஊருக்கு போய் இறங்க முடியாது போய்சேரவேண்டியதுதான்.....அப்படின்னு உள் மனசுக்குள் ஒரு குல்லநரி ஓலமிட்டு கொண்டிருந்தது.ஒரு வழியா பணமே கட்டாமா உள்ளே போய்டோம்னா பாத்துகுங்களே......


அவ்வளவும் உழைப்பு ( சாமார்த்தியம் )சரி சரி யாரும் கோவபடகூடாது சரியா.... ஆம சொல்லிட்டேன்


அப்புரம் என்ன ஜாலிதான் சின்னதம்பி படம்தான் ஞாபகத்துக்கு வந்தது.......அதுல அந்த மனநிலை சரியில்லாத ஆள் எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்.......அப்படின்னு சொல்லிகிட்டே ஓடுவார் இல்லையா.........

அதெ தான் அந்த மனநிலையில் தான் நானும் மனசுக்குள் மல்லிகை மணம் போல மணக்க தொடங்கிய அம்மாவின் ஆட்டுகள் குழம்பு வாசம் நானும் மனசே சரியில்லாம நானும் ஊருக்கு போரேன் நானும் ஊருக்கு போரேன்......ஒரெ சவுண்டுதான் சத்தம் போட்டத பார்த்த அந்த அரபி மாமா ..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சு come with me ........
மறுபடியிம் எழுதுவேம்ல....... அடுத்தா பதிவில்....போய் காப்பி டீ குடிச்சிட்டு உடனே வந்திராதிங்க கொஞ்சம் பொருமையாகவே வாங்க.....


அப்பத்தான் கதைய சொல்லுவேன் சொல்லிட்டேன்.......


சிக்கிரம் வந்துட்டு அப்புரம் கதைய சொல்லல அப்படின்னா.... அதுக்கு கம்பெனி பொறுப்பு இல்ல......







Thursday, December 30, 2010

விம்மல்....



விடை கொடு
என்னை
விலைக்கு வாங்கிய
நாடே....

விம்மல்
தனியாமல்
என் வின்மின்
காத்திருப்பாள்
வழியேல்லாம்
விழிவைத்து...

விடைகொடு...

சொல்லமாட்டேன்
அவளிடம்
நி என்னை
கல்லாலடித்து
காசு கொடுத்ததை...

புண்ணாகிவிடும்
அவள் பூ
போன்ற மனது...

இருந்தும் பயம் தான்
எனக்குள்
எங்கே
தூக்கத்தில்
உளரிவிடுவேனோ என்று...

விடை கொடு என்னை
விலைக்கு வாங்கிய நாடே ....

டிஸ்கி:-
கோபம் எல்லாம் ஒன்னும் இல்லை .ஏதோ ஒரு விம்மல் எனக்குள் என்னவளின் நினைப்பாள்.விடுமுறையில் நான் வீட்டிற்க்கு போகபோறேன் இன்று....

அனைவருக்கும்
இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்...........







Thursday, December 23, 2010

சொன்னா புரியுதா...



நிலவை

நூலில் கட்டி

நான் நீண்டதூரம்

இழுத்து போனதுண்டு...



மூச்சு வாங்கி

நிற்க்கும்போது முறைத்தது்

அந்த முழு மதி என்னை

ஏழனமாய் பார்த்து..

இப்படி சொல்லி....


நான்

சுற்றிக்கொண்டே

நிற்கிரேன்...


நி நிற்க்கும்

இடத்தை விட்டு சுற்றுகிராய்யென்று...

நான் உன்னுடன்

சுற்றி திரிவது ஒரு வேலை

அந்த நிலவுக்கு தெரிந்திரிக்குமோ....

அதனால் இப்படி சொல்லியிருக்குமோ....

யோசிக்கிரேன்.....



டிஸ்கி்:- ஊரை சுத்தாத யாரவது பார்த்த பஞ்சயத்தாயிடும் சொன்னா யாரு கேக்குரா...ம்ம்ம் மாட்டிக்கிட்டா இப்படித்தான்.... எல்லாரும் யோசிக்கனும் புரியுதா






Friday, December 17, 2010

இலைகள் துளிர்விடும் தருனம்.........














இந்த விருதை தோழிகள் அன்புடன் ஆனந்தி , நீரோடை மலிக்கா, மற்றும் வெட்டிபேச்சு சித்ராவிற்கும் அளிக்கிறேன் வந்து பெற்றுக்கொள்ளவும்









மழை




வான் தாய்
அழுகையில்
பூமித்தாயின் சிரிப்பு....



நான்


விடை தெரியா
என் வினாதாளில்
இதுவும் கேள்வி.....




நினைப்பு


அலைகள்
அடித்து சென்ற நம்
கால்தடங்கள்
இன்னும்
அலையாய்
உன் நினைப்பு
அலை
ஓயாமல்... தடங்களாய்.......







டிஸ்கி-1
இலைகள் துளிவிடுமா என்ன !!!! லேசாக அதாங்க நட்டு லுசானமாதிரின்னு சொல்லுவாங்களே அப்படி ஆனதால தான் இப்படியேல்லாம் .
டிஸ்கி-2 அலோ விருதுக்கும் டிஸ்கி-1 க்கும் எந்த கனேசனும் இல்ல சரியா...










Tuesday, October 12, 2010

அப்பா....


தங்கமான நினைவுகள்.....
மரக்கிளையில் இழைகள் துளிர்விடும் தருனம்...


வியந்து
பார்க்கிரேன்
உங்களை நான்....


என்
விடியல் பொழுதுகளில்
உங்கள் மார்பினில்...


நான் தூங்கும் வரை
அனைத்திருப்பாள்
அம்மா...


நான் தூங்கிய பின்பும்
உங்கள் மார்பினில்
அனைப்பில் எத்தனை
நாட்கள் கடந்துபோயிருக்கின்றன...


எண்ணியதில்லை
எனக்கு அப்போது
எண்கள்
புலப்படவில்லை....


பால்ய வயதுகளில்
படுக்கையை ஈரமாக்வேனாம்
அம்மா இப்போது
அடிக்கடி சொல்லுவாள்...


நீங்களும்
அப்படித்தானாம்
பாட்டி சொல்லியிருக்கிராள்
அந்த காலத்துல உங்க
அப்பனும் அப்படித்தான் கண்ணு....


பத்து பக்க
ஏடுகளில் பல நூறு முறை
எழுதியிருப்பேன்...

என் அப்பா
இன்று காலை அடித்தார்
அரை மணிநேரத்திர்க்கு
பின்பு அனைத்துக்கொண்டார்....


என் அப்பா
இன்று கோவில் திருவிழாவுக்கு
கூட்டிக்கொண்டுபோனார்
கோவிலை சுற்றி காட்டினார்
என்
பிஞ்சு விரல் பிடித்து
லேசாக சிவந்திருக்குமோ
நினைத்து பார்க்கிரேன்...


எங்க அப்பா
அப்படி இப்படி என்று
கிறுக்கிய ஏடுகளையெல்லாம்
இப்போது
மொழிபெயர்ப்பு செய்கிரேன்...


மொழி தெரியாத
தேசத்தில் முழித்துக்
கொண்டு விழி பிதுங்கி...
மனசு பூரா
நீங்கதான் அப்பா
என்னமோ பன்னுது
அதையேல்லாம் இப்போது
என்னும் போது...


என்ன பன்னிகிட்டு
இருக்கிங்க இப்போ
புரையேரியிருக்கும
உங்களுக்கு
நான் நினைத்ததாலோ
என்னவோ....


என் அன்பின் முத்தங்கள் உங்களுக்கு அப்பா......ச்ச்ச்





டிஸ்கி:- பாச தாகங்கள் பஞ்சமான இந்த பலைவனத்தில் என் பஞ்சனையில் ஏதோ கனம் கானோம்.

என் தலையனை சலவைக்கு போனதால்தான் இந்த வசந்தகால வரிகள்







Friday, October 8, 2010

அவ்வளவுதான் வாழ்க்கை........

காசா.......(மனசு)


உறவுகள்
ஒரு கோடி
என்னைத்தேடி ஊர் கோடியில்...

உறவுகள்
ஏதும்மின்றி ஒத்தையில
நான் போரென்
அரபுநாட்டு தெருவேரமா...

கத்தையா பணம்
பாக்க ஒத்தையில
நான் போரென்
நித்திரை இல்லாம
இந்த சித்திரையில...

கலத்துமேட்டுல
நான் போனா மாப்பிள்ளை
எப்புடியிருக்கிங்க
அப்பா எங்க
அம்மா எங்க
அம்புட்டு பேரும் கேப்பாங்க
அவ்வளவு சுகமா இருக்கும்...

கத்தையா
பணமில்லனாலும்
ஒத்தையில நான் போனா
பத்து பேர் கேப்பான்
ஏய்யா எப்படியிருக்க
அங்கே....

இங்கே
கத்தைய பணமிருக்கு
ஒத்தையில நான் போரேன்
ஒரு பயகூட
என்னான்னு கேக்கல
கேட்டா என் பாசை
அவனுக்கு புரியல....

காசு காசுன்னு
கடலைத்தாண்டி
குடலை காயவச்சி
இந்த காகிதத்தை சேத்துவச்சி
காலம் போனபின்னெ
நான் என்ன கட்டிபிடிச்சி
அழவா.....?
கனக்கு மனசு


டிஸ்கி:-
மனசுதாங்க எல்லாத்துக்கு காரணம் அப்படின்னு சொல்லுவங்க அந்தமனசு கொஞ்சம் கனத்துபோனதாலத்தான் இப்படியெல்லாம்.....












Monday, September 6, 2010

என்ன சொல்ல .....


எனக்கு தேவைதான்...



ஒர் ஆயிரம் தடவை
சொல்லியிருப்பேன்
என் காதலை உனக்கு...


குளியலறை கண்ணாடி
முன்பு ஒரு முறை
உன்னிடத்தில்
சொல்லிட...


கடந்து போயின
காலங்கள்.....


நேற்று
கலட்டிவிட்டாய்
நான் நீண்ட நேரம் குளிப்பதாக
சொல்லி...


இன்னும் கொஞ்சம் காலம்...
டிஸ்கி:- வாழ்க்கையில எல்லாமே அனுபவிச்சாத்தான் தெரியிம் ம்ம்ம்.. அப்படின்னு சொல்லுவாங்க அதான்