Saturday, August 7, 2010

வேலை வேலை-2 தொடர்பதிவு

கேள்விகளுக்கா தட்டுப்பாடு....
நீண்டு கொண்டே செல்லும் இந்த கேள்விகள் இப்போதும் நம்மை விடாபிடியாக பிடித்து கொண்டு ஆட்டுவிக்கின்றன சில சமயங்களில் சரி வாங்க வேலைய பாப்போம்.


மறுபடியும் முதலில் இருந்தே ஆரம்பிப்போம். நான் கேட்கும் கேள்களுக்கு பதில் அதுதான் சொன்னெனே தயாராக வைத்திருப்பாளென்று . இந்த முறை கேள்வியே அதை பற்றித்தான் கேள்வியே.


அம்மா... சொல்லு கண்ணு. பணம் ஏம்மா சம்பாதிக்கனும் ... ?

வழக்கம் போலவே அவள் முதலில் தரும் பதிலை தராமல் . நான் எதிர்பார்க்காதபதிலை தந்தாள். கண்ணு நீ அப்ப அப்ப கேப்பியே... அம்மா எனக்கு அதை வாங்கித்தா இதை வாங்கித்தா என்று கையை நீட்டுவாயே அதற்கேல்லாம் பணம் வேனும். பணம் இல்லையின்னா நம்மளால அதையெல்லாம் வாங்கமுடியாது என்று முதல் பதிலை சொல்லிமுடித்தாள்


அவள் இரண்டாவது பதில் :- அப்பா நேத்து உனக்காக பதிதாக ஒரு scale வாங்கி வந்தாங்க நி ராத்திரி நல்லா தூங்கிட்ட அதனால அப்பா என்கிட்ட கொடுத்துட்டு வேலைக்கு போய்ட்டாங்க. சரி இந்த பத்திரமா வச்சிக்கோ உடைச்சிடாம என்று சொல்லிகொண்டே என் புத்தக பையில் வைத்து விட்டாள்..டிஸ்கி:- அதே scale ல எங்க அப்பா அடிச்சி சுக்கு சுக்குகாய் உடைந்து போனது எனக்குள் இன்னும் அந்த நினைவுகள் நீங்காமல் இன்று வரை.

இன்னும் ஒரு சிறிய துண்டு என் பெட்டியில் ஞாபக சின்னமாய் ....தொடரும் கேள்விகள் இன்னும்......வாங்க.....

Wednesday, August 4, 2010

வேலை வேலை-1 தொடர்பதிவு

கேள்விக்கா தட்டுபாடு...
நிறைய கேள்விகள் யாருங்க சொல்லிதராங்க இப்படியேல்லாம் கேக்க சொல்லி. நான் நினைக்கிறேன் எல்லாம் பிறக்கும் போதே பிக்‌ஷ் பன்னிக்கிட்டு பிறப்பாங்களோ? சரி விடுங்க நாம் எடுத்துக்கொண்ட இந்த வேலையாவது ஒழுங்க செய்யலாம்.இப்போது என் நினைவிற்க்கு வருவது பள்ளிக்கூட நாட்கள் தான். அட பாவி நீ அங்க இருந்தே ஆரம்பிச்சிட்டியா என்பது என் காதுகளுக்கு கேக்குது. ம்ம்ம்ம்..என்ன செய்ய உன்மையை சொன்னா யாரு கேக்குரா.


பள்ளிகூடத்திற்க்கும் வீட்டிற்க்கும் சுமார் 15 நிமிட நடைபயண தூரம்.வழக்கம் போல அம்மாவின் இடுப்பில் அமர்ந்து கொண்டு அந்த நாள் துக்கமாக தொடங்கும். நினைப்பு எல்லாம் பள்ளிகூடத்தின் மீதுதான் இன்னைக்கு போகாம வீட்டிலேயே விளையாடிவிடலாம் என்றால் ம்ம்ம்.... கும்....எங்க அம்மா இருக்கே. அவள் ஒரு மந்திரக்காரி கண்ணு இங்க வா சாப்பிடு நேரம் ஆயுடுச்சி நாம்ம கடைக்கு போய் மிட்டாய் வாங்கிகிட்டு வரலாம் என்பாள்.இப்போது புரிந்திருக்கும் நான் ஏன் மந்திரக்காரின்னு சொன்னேன்னு.எப்படியோ அவள் மந்திரத்தை முடித்து என்னை தூக்கி இடுப்பிலும் என் புத்தக பையை கையிலும் பினைத்துக்கொண்டு நடக்க ஆரம்பிப்பாள். சாதரணமாகவே நான் நிறைய பேசுவேன் என்று அம்மா சொல்லுவாள் சில சமயம் தம்பி பேசம வா இல்லன்னா டாக்டர் தாத்தாக்கிட கூட்டிக்கிட்டு போய் வாய்ல ஊசி போட சொல்லிடுவேன்னு அவள் மிரட்டிய தருனங்களும் உண்டு. இப்படி பலநாட்கள் கடந்து போய் இருக்கிரது. என் நினைவில் உள்ள அந்தநாள்


வழக்கம் போல் எல்லாம் முடிந்து பள்ளிகூடம் கிளம்பும் தருனம் வாசல்படி கடந்து தெருவிர்க்கு வந்து விட்டோம். அம்மா என்றேன் என்ன கண்ணு என்ன ஆச்சு சொல்லு என்றாள் ம்ம்ம்... சொல்லு மறுபடியும் அம்மா நான் ஏம்மா பள்ளிக்கூடம் போகனும் ? நான் என்ன கேள்விகேட்டாலும் பதிலை தயாராக முந்தனையில் முடிந்து வைத்திருப்பாள். வேற என்ன காசுதான் 10 பத்து பைசாகவாக முடிந்துவைத்திருப்பாள்.ஆனால் அன்று பதிலையும் தந்தாள் பதிலாக பத்துபைசாவும் தந்தாள். ம்ம்ம்... அவள் சொன்ன பதில்


எண்-1 கண்ணு நி பள்ளிகூடம் போய் நல்லா படிச்சாத்தான் நிறைய பணம் சம்பாதிக்கலாம். நிறைய பணம் சம்பாதிச்சாத்தான் நி பெரிய மனிசனா ஆவ இல்லையினா பாரு அந்த பூச்சாண்டிகாரம் போல் ஆயிடுவ அதனாலத்தான் அம்மா உன்னை பள்ளிக்கூடம் அனுப்புறேன் சொல்லி முடித்தாள் பதில் எண்-1 யை

எண்-2 கண்ணு இந்த இந்த காசை பத்திரம்மா சட்டை பையில் போட்டுக்கோ மதியம் வரும்போது மிட்டாய் வாங்கிக்கோ என்றாள்டிஸ்கி:- இன்று வரை என் நினைவில் அந்த கேள்விகளின் தருனங்கள் சுவடுகளாய் பதிந்ததினால் வந்த பதிவு இது இப்போதும் தேடுகிரேன் எங்கே அந்த பத்து பைசாவை இன்று ....


இன்னும் நிறைய கேள்விகளுடன்..........Monday, August 2, 2010

வேலை வேலை.......


ஒரு மாசம் ஆயிடுச்சி நான் வலைதளத்தில் உலாவி.என்ன செய்யா வேலை வேலை ஒன்னுமே முடியல பித்துபிடித்ததுபோல ஆமா நீங்க சொல்றது என் காதுல விழுது.அதேமாதிரித்தான் அலைந்தேன் கடந்தமாதம் முழுவதும்.


நிறைய மாற்றங்கள்.....

நிறைய ஏமாற்றங்கள்....

நிறைய தவிப்புகள்...

நிறைய தவறுகள்... இன்னும் எவ்வளவே ம்ம்ம்ம்...நிறைய விவாதிப்போம் இந்த வேலைய பத்தி எந்த வேலை என்று நீங்கள் கேட்பது ம்ம்ம்ம்ம்... எல்லா வேலையும் தான்இந்த ஒருமாதத்தில் என்னில் உதயமான கேள்விகளை நான் பதிவாக இட முடிவு செய்திருக்கிரென் அதற்கான தலையங்கம் தான் இந்த பதிவு...