Sunday, June 23, 2013

எப்படி சொல்லுவேன் இவங்களுக்கு.......

ஊடலின் பிணைப்பு

உறக்கம்

துறந்து விழித்தேன்

உறைந்து போனேன்


என் செல்லத்தையும் காணோம்

செல்ல மகளையும் காணோம்


ஏதோ சத்தம்

கூப்புடுவது போல

வாசல் கதவை

திறந்தேன்


பால்காரி

தயிர்காரி


இதோ

வந்துவிடுகிறேன்...

ஒரு நிமிடம் என்றேன்


பாசமா

வி்சாரித்தாள்

வுட்டுகாரம்மா எங்க ?

நீங்க வந்து

இதையெல்லாம் வாங்கறிங்க...


பசியோட

கத்திச்சு

எங்கவிட்டு பப்பி

பால் ஊத்திவைத்தேன்

குடிக்கல மௌனமாய்...


பக்கத்துவீட்டு

தங்கச்சி

என்னாண்ணே வாசல்ல

கோலத்தை காணோம்

என்னாச்சு அண்ணிக்கு

உடம்பு ஏதும் சரியில்லையா...


எப்படி

நான் சொல்லுவேன்

இவங்ககிட்ட யெல்லாம்


நேத்து நானும்

அவளும் சண்டையிட்டு

நானே அவளை

என்

மாமியார் வீட்டில்

விட்டு விட்டு வந்ததை....

உடன் பிறப்பு கவிதைகள்

வாழ்க்கை 

முண்டியடிக்கும் நெரிசலின் 
கசகசப்பில் திணறி வெறுப்பைச் சுமக்கிறது. 
இதயத்திற்கு நெருக்கமற்றத் தேடல்.. 
ஏனோ நினைவில் ஊறி மறைகிறது எறும்பாய் இவ் வாழ்வு..! 

தேடல் 
உன் நாணத்தில் 
இடறி விழுந்த என் முத்தங்களைத் 
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்.. 
கன்னக்குழி விழ சிரிக்கிறாய் நீ..!! 

நிலையில்லா நிலை 

இப்பொழுதெல்லாம் 
அலுவலகத்தை விட மருத்துவமனை பிடித்திருக்கிறது
வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன். இசை அரங்குகளை விட சப்தங்கள் 
உயிர்ப்புடன் எழும் பேருந்து நிலையங்களில் 
வெகு நேரம் பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன் 
சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும் குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன் கட்டணக் கழிப்பிடங்களின்
பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன். 
பூங்காக்களை விட பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள் அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன் 
வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட மாய 
விண்வெளியே நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம்.

Tuesday, June 7, 2011

அவள்....


உன்னை தேடி

உலா நூறு போயிருப்பேன்

என் உள்ள

கனவுகளில்


ஒருபோதும்

நீ கிடைத்ததில்லை எனக்கு

விடியும் போது

வெறும் கைகளோடு தான்


நான்

விழித்திருப்பேன்...



Sunday, June 5, 2011

காத்திருப்பு...




உனது

வரவிற்க்காக

காத்திருக்கும்

என் வீட்டு வாசல்...


வெகு நாட்களாய்

விதவை கோலத்தில்

நீ வருவதெப்போ....




Thursday, June 2, 2011

நாட்குறிப்பு...




நாட்குறிப்பெழுதும்

பழக்கமில்லை

எனக்கு


பழகிகொண்டேன்

உன் பழக்கம்

கிடைத்ததால்


நாட்கள் போயின

நாட்குறிப்பு மட்டும்

மிச்சமாய் என்னிடம்

நீ.......




Sunday, May 1, 2011

சொல்லிவிட்டுபோனால்.......




இன்றாவது வா
என்னுடன் ஏமாற்றியது போதும்...


அந்த இளங்காற்று வீசும்
கடற்கரைக்கு போய் வரலாம் என்றேன்....

இங்கேயே நில்
வந்துவிடுகிறேன் என்றாய்...


வருடங்கள் போயின
வயோதிகனாகிவிட்டேன் நான்...


உன்னை சோதனை செய்வேன்
என்று சொல்லியிருந்தாய்...


ஒரு தருணத்தில்


சோர்ந்து போய்விடவில்லை
சோகமும் என்னை சூழ்ந்து விடவில்லை

காத்திருக்கிறேன் உனக்காக
கரையோடு அடித்து செல்லும்
நுரைபோல...


Saturday, February 26, 2011

சொந்த ஊருக்கு போன கதை-2


ம்ம்ம்... ஒருவழியா வேலையெல்லாம் முடிஞ்சி இப்பதான் நேரமே கிடைச்சதது...

சரி காப்பி குடிச்சுட்டு நீங்க சீக்கிரமா வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல...சரி கதைக்கு வருவோம்.

சார்ஜா விமானநிலைய போலிஸ் எங்களை நிறைய கேள்விகள் கேட்டு பதில் ஏதும் கிடைக்காததால்...புரியாதால்..சரி போய்ட்டு வாங்க சார்னு...வேர என்ன சலிவுட்டுதான்

நண்பா எப்படி உன்னால மட்டும் இப்படி முடியிது அவ்வளவு அந்த போலிஸ் கேட்டும் நீ வாய open பன்னவே இல்லையே...மாப்பு பதில் சொன்னா யார் உள்ள போரது...

ஒரு வழியா மூட்டை முடிச்சு எல்லாம் இல்லைங்க அதான் சூட்கேஸ் லகேஜ் எல்லாம் தூக்கிகிட்டு உள்ளே ஏறிட்டோம்ல. வழக்கம் போல அந்த ஏர்வேஸ் அக்கா வணக்கம் சொல்லி நீங்க அங்க தம்பி நீங்க இங்க அப்படின்னு சீட்டு புடிச்சி கொடுத்துச்சு.அக்கா உங்களுக்கு ஒரு பெரிய நன்றி ஆள விடுங்க.நான் தூங்க போரேன்.முழிச்சிருந்தா பயத்துல ஃப்ளைட் பறக்கரத்துக்கு முன்னாடி நான்பறந்துடுவேன் அப்படின்னு உள்மனதிற்க்குள் லேசான பதற்றம்

மூனுமணி நேர பயணம் சென்னை எங்களை பட்டு கம்பளம் விரித்து வரவேற்றது....அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் உங்களை வரவேற்கிரது என்ன மரியாதை நம்ம ஊருன்னா நம்ம ஊருதான்...



அப்படியேல்லாம் ஒன்னும் இல்ல சொற்கமே என்றாலும் நம்ம ஊரபோல
வருமா...