Friday, May 28, 2010

வசந்தகாலத்தின் வலிகள்


முதல் பூசை(ஜை)

நாலு வயல்
நாத்து நட்டு காத்திருப்பான்
என் பாட்டன் பசியேடு
பாட்டி சோறு
கொடுத்துவிடுவா
என்கிட்டே அப்படின்னு

ஆத்தை கடந்து
போகும் போது பாத்து
போங்கன்னு சொல்லிவிடுவா

ஆத்துல கால
வச்சதும் போயிடும் அரமனசு
தண்ணியேடு
அதில் ஓடும் மீன
பாத்ததும் முழு
மனசும் போய்டும் மீன் புடிக்க

பொழுது போவது
தெரியாம நாங்க பிடிச்சி
விட்டிருப்போம்
ஒரு கூட மீன
என் அண்ணன் சொல்லுவான்
போதுண்டா போலாம்னு
பயபுல்ல நம்ம யாறு சொல்லி
கேட்டிருக்கோம்
கொஞ்சநேரத்துல
எலெய்ய்ய்ய்ய்...........செந்திலூ.....
சத்தம் போட்டு
வந்தா என் பாட்டி
கொடுத்த ரெண்டுவாட்டி
வாதமடக்கி
குச்சியெடுச்சி

இப்பக்கூட
லேசா வலிக்குது
அதை என்னி
நினைச்சிபாக்கும் போது....


டிஸ்கி:-வலிகளின் வடுக்கள் நேற்று இரவு நீண்ட நேரமாக தழும்புகளை வருடியதால் வந்த வரிகள்

என் வலிகள் எல்லோரையிம் சென்றடைய உங்கள் உரிமையை இங்கே பகிர்ந்துகொள்ளவும்

Sunday, May 9, 2010

வசந்த காலம் அது வருமோ இனி



அத்து மீறி நாம்
பறித்த பூக்களின் வலியை
யாரிடம் போய் சொல்ல
சொல்லி சிரித்திருக்கிறோம்
நட்பூவட்டத்தில் நாம்


அர்த்தஜாமத்தில்
நான் அழைத்தாலும்
ஆ சொல்லுடா
என்பாயே


பேசி பேசி
நாம் கழித்த நாட்கள்
பேப்பரில் எழுதினாலும்
கொள்ளாதே நண்பா


பேரின்ப சேற்றை வாரி
இறைத்துக்கொண்டோம்
நம் மீது
அந்த நீல பெருங்கடலில்
நீந்தி குளிக்கும்போதேல்லாம்


உன்பெயரையிம்
என்பெயரையிம்
ஒன்றாக வைக்க சொல்லியிருப்பானோ
பிரம்மன் யோசிக்கிறேன்
சில நேரங்களில்
நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்...


எத்தனை நாட்கள்
வந்துபோயினும்
இன்று போல் கிட்டாது
இனிமேல் நீ மீண்டும் பிறக்க


நி
தேனி கம்பம் மதுரை
போய் தேடிவிட்டு வந்த
தேவதை பற்றி நி
சொல்லி கேட்ட நட்கள்
இன்று நினைத்தாலும்
திரும்பி வருமோ


இன்பவிதைகளை
என்னுள் விதைத்த
நி விதையாய்
இன்றுதான் விழுந்தாயே
பூமித்தாயின் மடியில்

திரும்பவும்
சந்திக்கும் சந்தர்ப்பம்
கிடைத்தால் சொல்லிவைக்கிறேன்
பிரம்மனிடம்
நண்பர்களாகவே
பிறக்கவேண்டும்
இன்னும் ஒருமுறை..........


செந்தில்குமார்.ப
இன்று பிறந்தநாள் கொண்டாடும்
எனது நண்பனுக்காக வாழ்த்து(ங்)கள்....

Saturday, May 8, 2010

தூறல் மழையிம் துபாய் ஆசையிம்


புள்ளிகளை
கூட்டிக்கழித்திருக்கிறேன்
மொட்டை மாடியில்
நீ வரும் போது.....
சண்டைகள் கூட
வந்து போயிருக்கிறது
எனக்கும் தமயனுக்கும்
என் கூட்டல்பிழை என்று...
பாட்டன் வீட்டு
கானிநிலத்தில் கிடந்து
உருண்ட நாட்கள்
உருண்டு ஓடின
என்னை விட்டு ஓர்
ஆயிரம் மைல் தொலைவில்...
விபரம்
ஏதும் அறியாமல்
என்னுள் விளைந்த விளைவு
வெளிநாடு.....
இன்று லேசான தூறல்
பாலை மணலில்
பழைய ஞாபகம்
பதிந்து போனது
பாலை மணலின் தூறல்
மழை போல்...
லேசான கண்ணீர்
செலவாகிபோன
அந்தநாட்களின் நினைவில்
என் கண்களின் ஓரத்தில்......
துக்கங்களை
தூக்கிக்கொண்டு
தூறுது இந்த தூறல் மழை
கார்மேகங்களை
துனையாக்கிகொண்டு
என் ஏக்கத்தை தூறலாய்.....