நீண்டு கொண்டே செல்லும் இந்த கேள்விகள் இப்போதும் நம்மை விடாபிடியாக பிடித்து கொண்டு ஆட்டுவிக்கின்றன சில சமயங்களில் சரி வாங்க வேலைய பாப்போம்.
மறுபடியும் முதலில் இருந்தே ஆரம்பிப்போம். நான் கேட்கும் கேள்களுக்கு பதில் அதுதான் சொன்னெனே தயாராக வைத்திருப்பாளென்று . இந்த முறை கேள்வியே அதை பற்றித்தான் கேள்வியே.
அம்மா... சொல்லு கண்ணு. பணம் ஏம்மா சம்பாதிக்கனும் ... ?
வழக்கம் போலவே அவள் முதலில் தரும் பதிலை தராமல் . நான் எதிர்பார்க்காதபதிலை தந்தாள். கண்ணு நீ அப்ப அப்ப கேப்பியே... அம்மா எனக்கு அதை வாங்கித்தா இதை வாங்கித்தா என்று கையை நீட்டுவாயே அதற்கேல்லாம் பணம் வேனும். பணம் இல்லையின்னா நம்மளால அதையெல்லாம் வாங்கமுடியாது என்று முதல் பதிலை சொல்லிமுடித்தாள்
அவள் இரண்டாவது பதில் :- அப்பா நேத்து உனக்காக பதிதாக ஒரு scale வாங்கி வந்தாங்க நி ராத்திரி நல்லா தூங்கிட்ட அதனால அப்பா என்கிட்ட கொடுத்துட்டு வேலைக்கு போய்ட்டாங்க. சரி இந்த பத்திரமா வச்சிக்கோ உடைச்சிடாம என்று சொல்லிகொண்டே என் புத்தக பையில் வைத்து விட்டாள்..
டிஸ்கி:- அதே scale ல எங்க அப்பா அடிச்சி சுக்கு சுக்குகாய் உடைந்து போனது எனக்குள் இன்னும் அந்த நினைவுகள் நீங்காமல் இன்று வரை.
இன்னும் ஒரு சிறிய துண்டு என் பெட்டியில் ஞாபக சின்னமாய் ....
தொடரும் கேள்விகள் இன்னும்......வாங்க.....
நல்ல கேள்வி பதில் தான்... அழகான நினைவலை... :-))
ReplyDeleteம்ம் இப்படித்தான் நடக்கிறது நாம் விரும்பும் பொருளே நமக்கு எதிராய் திரும்புவது.. செந்தில்..:
ReplyDeleteவாங்க ஆனந்தி நலமா ? வருகைக்கு நன்றி
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி பல தேனக்கா....உங்களது இடுகைகள் இன்னும் என்னை எழுததூண்டுகிரது அக்கா..
ReplyDelete