Tuesday, October 12, 2010

அப்பா....


தங்கமான நினைவுகள்.....
மரக்கிளையில் இழைகள் துளிர்விடும் தருனம்...


வியந்து
பார்க்கிரேன்
உங்களை நான்....


என்
விடியல் பொழுதுகளில்
உங்கள் மார்பினில்...


நான் தூங்கும் வரை
அனைத்திருப்பாள்
அம்மா...


நான் தூங்கிய பின்பும்
உங்கள் மார்பினில்
அனைப்பில் எத்தனை
நாட்கள் கடந்துபோயிருக்கின்றன...


எண்ணியதில்லை
எனக்கு அப்போது
எண்கள்
புலப்படவில்லை....


பால்ய வயதுகளில்
படுக்கையை ஈரமாக்வேனாம்
அம்மா இப்போது
அடிக்கடி சொல்லுவாள்...


நீங்களும்
அப்படித்தானாம்
பாட்டி சொல்லியிருக்கிராள்
அந்த காலத்துல உங்க
அப்பனும் அப்படித்தான் கண்ணு....


பத்து பக்க
ஏடுகளில் பல நூறு முறை
எழுதியிருப்பேன்...

என் அப்பா
இன்று காலை அடித்தார்
அரை மணிநேரத்திர்க்கு
பின்பு அனைத்துக்கொண்டார்....


என் அப்பா
இன்று கோவில் திருவிழாவுக்கு
கூட்டிக்கொண்டுபோனார்
கோவிலை சுற்றி காட்டினார்
என்
பிஞ்சு விரல் பிடித்து
லேசாக சிவந்திருக்குமோ
நினைத்து பார்க்கிரேன்...


எங்க அப்பா
அப்படி இப்படி என்று
கிறுக்கிய ஏடுகளையெல்லாம்
இப்போது
மொழிபெயர்ப்பு செய்கிரேன்...


மொழி தெரியாத
தேசத்தில் முழித்துக்
கொண்டு விழி பிதுங்கி...
மனசு பூரா
நீங்கதான் அப்பா
என்னமோ பன்னுது
அதையேல்லாம் இப்போது
என்னும் போது...


என்ன பன்னிகிட்டு
இருக்கிங்க இப்போ
புரையேரியிருக்கும
உங்களுக்கு
நான் நினைத்ததாலோ
என்னவோ....


என் அன்பின் முத்தங்கள் உங்களுக்கு அப்பா......ச்ச்ச்





டிஸ்கி:- பாச தாகங்கள் பஞ்சமான இந்த பலைவனத்தில் என் பஞ்சனையில் ஏதோ கனம் கானோம்.

என் தலையனை சலவைக்கு போனதால்தான் இந்த வசந்தகால வரிகள்







Friday, October 8, 2010

அவ்வளவுதான் வாழ்க்கை........

காசா.......(மனசு)


உறவுகள்
ஒரு கோடி
என்னைத்தேடி ஊர் கோடியில்...

உறவுகள்
ஏதும்மின்றி ஒத்தையில
நான் போரென்
அரபுநாட்டு தெருவேரமா...

கத்தையா பணம்
பாக்க ஒத்தையில
நான் போரென்
நித்திரை இல்லாம
இந்த சித்திரையில...

கலத்துமேட்டுல
நான் போனா மாப்பிள்ளை
எப்புடியிருக்கிங்க
அப்பா எங்க
அம்மா எங்க
அம்புட்டு பேரும் கேப்பாங்க
அவ்வளவு சுகமா இருக்கும்...

கத்தையா
பணமில்லனாலும்
ஒத்தையில நான் போனா
பத்து பேர் கேப்பான்
ஏய்யா எப்படியிருக்க
அங்கே....

இங்கே
கத்தைய பணமிருக்கு
ஒத்தையில நான் போரேன்
ஒரு பயகூட
என்னான்னு கேக்கல
கேட்டா என் பாசை
அவனுக்கு புரியல....

காசு காசுன்னு
கடலைத்தாண்டி
குடலை காயவச்சி
இந்த காகிதத்தை சேத்துவச்சி
காலம் போனபின்னெ
நான் என்ன கட்டிபிடிச்சி
அழவா.....?
கனக்கு மனசு


டிஸ்கி:-
மனசுதாங்க எல்லாத்துக்கு காரணம் அப்படின்னு சொல்லுவங்க அந்தமனசு கொஞ்சம் கனத்துபோனதாலத்தான் இப்படியெல்லாம்.....