உறவுகள்
ஒரு கோடி
என்னைத்தேடி ஊர் கோடியில்...
உறவுகள்
ஏதும்மின்றி ஒத்தையில
நான் போரென்
அரபுநாட்டு தெருவேரமா...
கத்தையா பணம்
பாக்க ஒத்தையில
நான் போரென்
நித்திரை இல்லாம
இந்த சித்திரையில...
கலத்துமேட்டுல
நான் போனா மாப்பிள்ளை
எப்புடியிருக்கிங்க
அப்பா எங்க
அம்மா எங்க
அம்புட்டு பேரும் கேப்பாங்க
அவ்வளவு சுகமா இருக்கும்...
கத்தையா
பணமில்லனாலும்
ஒத்தையில நான் போனா
பத்து பேர் கேப்பான்
ஏய்யா எப்படியிருக்க
அங்கே....
இங்கே
கத்தைய பணமிருக்கு
ஒத்தையில நான் போரேன்
ஒரு பயகூட
என்னான்னு கேக்கல
கேட்டா என் பாசை
அவனுக்கு புரியல....
காசு காசுன்னு
கடலைத்தாண்டி
குடலை காயவச்சி
இந்த காகிதத்தை சேத்துவச்சி
காலம் போனபின்னெ
நான் என்ன கட்டிபிடிச்சி
அழவா.....?
கனக்கு மனசு
டிஸ்கி:-
மனசுதாங்க எல்லாத்துக்கு காரணம் அப்படின்னு சொல்லுவங்க அந்தமனசு கொஞ்சம் கனத்துபோனதாலத்தான் இப்படியெல்லாம்.....
கத்தையா
ReplyDeleteபணமில்லனாலும்
ஒத்தையில நான் போனா
பத்து பேர் கேப்பான்
ஏய்யா எப்படியிருக்க
அங்கே....
.....இப்போ என்னையும் ஊரை மிஸ் பண்ண வச்சிட்டீங்க.
படித்தப்பின்னும் மனதின் கனம் கூடுகிறது....திரைக்கடல் ஓடி திரவியம் சேர்த்தலின் வலி..
ReplyDeleteChitra said...
ReplyDelete.....இப்போ என்னையும் ஊரை மிஸ் பண்ண வச்சிட்டீங்க.
வாங்க சித்ரா ..... எப்படி இருக்கிங்க
அதுதானே உண்மை சித்ரா....
தமிழரசி said...
ReplyDeleteபடித்தப்பின்னும் மனதின் கனம் கூடுகிறது....திரைக்கடல் ஓடி திரவியம் சேர்த்தலின் வலி..
வங்க தமிழரசி...
வாழ்க்கையில் இதுவும் ஒருவகையில் வலிகளை தாங்கிய இதமான தருனங்கள் தமிழரசி....
உண்மை...மனசை அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க...வருத்தப்படாதீங்க...நாங்க இருக்கோம்...
ReplyDeleteநீங்க பிளாக்குக்கு வாங்க அக்கறையோட விசாரிக்க ஆயிரம் பேர் காத்திருக்கோம்...
ஓ நீங்களும் நம்மூரு காரரா..அப்ப உரிமையா கேக்கலாம்..
ReplyDeleteஏய்யா எப்படி இருக்கே..
நல்லா எழுதியிருக்கீங்க செந்தில்குமார்..
ReplyDeleteவாங்க பிரியமுடன் ரமேஷ்....வணக்கம்
ReplyDeleteபிரியமுடன் ரமேஷ் said...
உண்மை...மனசை அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க...வருத்தப்படாதீங்க...நாங்க இருக்கோம்...
நீங்க பிளாக்குக்கு வாங்க அக்கறையோட விசாரிக்க ஆயிரம் பேர் காத்திருக்கோம்...
நன்றி ரமேஷ்....
பிரியமுடன் ரமேஷ் said...
ஓ நீங்களும் நம்மூரு காரரா..அப்ப உரிமையா கேக்கலாம்..
ஏய்யா எப்படி இருக்கே..
நல்லயிருக்கேன் ரமேஷ்....
நீங்க எப்படியிருக்கிங்க...?
பதிவுலகில் பாபு said...
நல்லா எழுதியிருக்கீங்க செந்தில்குமார்
வாங்க பாபு .... எனது வணக்கங்கள்
முயற்ச்சிக்கிரேன் இன்னும் செம்மையாக எழுதிட...
வருகைக்கு நன்றி