Thursday, December 30, 2010

விம்மல்....



விடை கொடு
என்னை
விலைக்கு வாங்கிய
நாடே....

விம்மல்
தனியாமல்
என் வின்மின்
காத்திருப்பாள்
வழியேல்லாம்
விழிவைத்து...

விடைகொடு...

சொல்லமாட்டேன்
அவளிடம்
நி என்னை
கல்லாலடித்து
காசு கொடுத்ததை...

புண்ணாகிவிடும்
அவள் பூ
போன்ற மனது...

இருந்தும் பயம் தான்
எனக்குள்
எங்கே
தூக்கத்தில்
உளரிவிடுவேனோ என்று...

விடை கொடு என்னை
விலைக்கு வாங்கிய நாடே ....

டிஸ்கி:-
கோபம் எல்லாம் ஒன்னும் இல்லை .ஏதோ ஒரு விம்மல் எனக்குள் என்னவளின் நினைப்பாள்.விடுமுறையில் நான் வீட்டிற்க்கு போகபோறேன் இன்று....

அனைவருக்கும்
இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்...........







Thursday, December 23, 2010

சொன்னா புரியுதா...



நிலவை

நூலில் கட்டி

நான் நீண்டதூரம்

இழுத்து போனதுண்டு...



மூச்சு வாங்கி

நிற்க்கும்போது முறைத்தது்

அந்த முழு மதி என்னை

ஏழனமாய் பார்த்து..

இப்படி சொல்லி....


நான்

சுற்றிக்கொண்டே

நிற்கிரேன்...


நி நிற்க்கும்

இடத்தை விட்டு சுற்றுகிராய்யென்று...

நான் உன்னுடன்

சுற்றி திரிவது ஒரு வேலை

அந்த நிலவுக்கு தெரிந்திரிக்குமோ....

அதனால் இப்படி சொல்லியிருக்குமோ....

யோசிக்கிரேன்.....



டிஸ்கி்:- ஊரை சுத்தாத யாரவது பார்த்த பஞ்சயத்தாயிடும் சொன்னா யாரு கேக்குரா...ம்ம்ம் மாட்டிக்கிட்டா இப்படித்தான்.... எல்லாரும் யோசிக்கனும் புரியுதா






Friday, December 17, 2010

இலைகள் துளிர்விடும் தருனம்.........














இந்த விருதை தோழிகள் அன்புடன் ஆனந்தி , நீரோடை மலிக்கா, மற்றும் வெட்டிபேச்சு சித்ராவிற்கும் அளிக்கிறேன் வந்து பெற்றுக்கொள்ளவும்









மழை




வான் தாய்
அழுகையில்
பூமித்தாயின் சிரிப்பு....



நான்


விடை தெரியா
என் வினாதாளில்
இதுவும் கேள்வி.....




நினைப்பு


அலைகள்
அடித்து சென்ற நம்
கால்தடங்கள்
இன்னும்
அலையாய்
உன் நினைப்பு
அலை
ஓயாமல்... தடங்களாய்.......







டிஸ்கி-1
இலைகள் துளிவிடுமா என்ன !!!! லேசாக அதாங்க நட்டு லுசானமாதிரின்னு சொல்லுவாங்களே அப்படி ஆனதால தான் இப்படியேல்லாம் .
டிஸ்கி-2 அலோ விருதுக்கும் டிஸ்கி-1 க்கும் எந்த கனேசனும் இல்ல சரியா...