Sunday, June 23, 2013

எப்படி சொல்லுவேன் இவங்களுக்கு.......

ஊடலின் பிணைப்பு

உறக்கம்

துறந்து விழித்தேன்

உறைந்து போனேன்


என் செல்லத்தையும் காணோம்

செல்ல மகளையும் காணோம்


ஏதோ சத்தம்

கூப்புடுவது போல

வாசல் கதவை

திறந்தேன்


பால்காரி

தயிர்காரி


இதோ

வந்துவிடுகிறேன்...

ஒரு நிமிடம் என்றேன்


பாசமா

வி்சாரித்தாள்

வுட்டுகாரம்மா எங்க ?

நீங்க வந்து

இதையெல்லாம் வாங்கறிங்க...


பசியோட

கத்திச்சு

எங்கவிட்டு பப்பி

பால் ஊத்திவைத்தேன்

குடிக்கல மௌனமாய்...


பக்கத்துவீட்டு

தங்கச்சி

என்னாண்ணே வாசல்ல

கோலத்தை காணோம்

என்னாச்சு அண்ணிக்கு

உடம்பு ஏதும் சரியில்லையா...


எப்படி

நான் சொல்லுவேன்

இவங்ககிட்ட யெல்லாம்


நேத்து நானும்

அவளும் சண்டையிட்டு

நானே அவளை

என்

மாமியார் வீட்டில்

விட்டு விட்டு வந்ததை....

உடன் பிறப்பு கவிதைகள்

வாழ்க்கை 

முண்டியடிக்கும் நெரிசலின் 
கசகசப்பில் திணறி வெறுப்பைச் சுமக்கிறது. 
இதயத்திற்கு நெருக்கமற்றத் தேடல்.. 
ஏனோ நினைவில் ஊறி மறைகிறது எறும்பாய் இவ் வாழ்வு..! 

தேடல் 
உன் நாணத்தில் 
இடறி விழுந்த என் முத்தங்களைத் 
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்.. 
கன்னக்குழி விழ சிரிக்கிறாய் நீ..!! 

நிலையில்லா நிலை 

இப்பொழுதெல்லாம் 
அலுவலகத்தை விட மருத்துவமனை பிடித்திருக்கிறது
வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன். இசை அரங்குகளை விட சப்தங்கள் 
உயிர்ப்புடன் எழும் பேருந்து நிலையங்களில் 
வெகு நேரம் பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன் 
சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும் குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன் கட்டணக் கழிப்பிடங்களின்
பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன். 
பூங்காக்களை விட பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள் அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன் 
வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட மாய 
விண்வெளியே நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம்.