Sunday, June 23, 2013

எப்படி சொல்லுவேன் இவங்களுக்கு.......

ஊடலின் பிணைப்பு

உறக்கம்

துறந்து விழித்தேன்

உறைந்து போனேன்


என் செல்லத்தையும் காணோம்

செல்ல மகளையும் காணோம்


ஏதோ சத்தம்

கூப்புடுவது போல

வாசல் கதவை

திறந்தேன்


பால்காரி

தயிர்காரி


இதோ

வந்துவிடுகிறேன்...

ஒரு நிமிடம் என்றேன்


பாசமா

வி்சாரித்தாள்

வுட்டுகாரம்மா எங்க ?

நீங்க வந்து

இதையெல்லாம் வாங்கறிங்க...


பசியோட

கத்திச்சு

எங்கவிட்டு பப்பி

பால் ஊத்திவைத்தேன்

குடிக்கல மௌனமாய்...


பக்கத்துவீட்டு

தங்கச்சி

என்னாண்ணே வாசல்ல

கோலத்தை காணோம்

என்னாச்சு அண்ணிக்கு

உடம்பு ஏதும் சரியில்லையா...


எப்படி

நான் சொல்லுவேன்

இவங்ககிட்ட யெல்லாம்


நேத்து நானும்

அவளும் சண்டையிட்டு

நானே அவளை

என்

மாமியார் வீட்டில்

விட்டு விட்டு வந்ததை....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.