கூட்டிக்கழித்திருக்கிறேன்
மொட்டை மாடியில்
நீ வரும் போது.....
சண்டைகள் கூட
வந்து போயிருக்கிறது
எனக்கும் தமயனுக்கும்
என் கூட்டல்பிழை என்று...
பாட்டன் வீட்டு
கானிநிலத்தில் கிடந்து
உருண்ட நாட்கள்
உருண்டு ஓடின
என்னை விட்டு ஓர்
ஆயிரம் மைல் தொலைவில்...
விபரம்
ஏதும் அறியாமல்
என்னுள் விளைந்த விளைவு
வெளிநாடு.....
இன்று லேசான தூறல்
பாலை மணலில்
பழைய ஞாபகம்
பதிந்து போனது
பாலை மணலின் தூறல்
மழை போல்...
லேசான கண்ணீர்
செலவாகிபோன
அந்தநாட்களின் நினைவில்
என் கண்களின் ஓரத்தில்......
துக்கங்களை
தூக்கிக்கொண்டு
தூறுது இந்த தூறல் மழை
கார்மேகங்களை
துனையாக்கிகொண்டு
என் ஏக்கத்தை தூறலாய்.....
நல்ல கவிதை நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி
ReplyDeleteசசிகுமார்
உங்களை போல்
நல்லவர்கள்
ஆசிரவாதம் தான்
எல்லாம் இல்லையேல்
ஒன்றும் இல்லை......