
அத்து மீறி நாம்
பறித்த பூக்களின் வலியை
யாரிடம் போய் சொல்ல
சொல்லி சிரித்திருக்கிறோம்
நட்பூவட்டத்தில் நாம்
அர்த்தஜாமத்தில்
நான் அழைத்தாலும்
ஆ சொல்லுடா
என்பாயே
பேசி பேசி
நாம் கழித்த நாட்கள்
பேப்பரில் எழுதினாலும்
கொள்ளாதே நண்பா
பேரின்ப சேற்றை வாரி
இறைத்துக்கொண்டோம்
நம் மீது
அந்த நீல பெருங்கடலில்
நீந்தி குளிக்கும்போதேல்லாம்
உன்பெயரையிம்
என்பெயரையிம்
ஒன்றாக வைக்க சொல்லியிருப்பானோ
பிரம்மன் யோசிக்கிறேன்
சில நேரங்களில்
நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்...
எத்தனை நாட்கள்
வந்துபோயினும்
இன்று போல் கிட்டாது
இனிமேல் நீ மீண்டும் பிறக்க
நி
தேனி கம்பம் மதுரை
போய் தேடிவிட்டு வந்த
தேவதை பற்றி நி
சொல்லி கேட்ட நட்கள்
இன்று நினைத்தாலும்
திரும்பி வருமோ
இன்பவிதைகளை
என்னுள் விதைத்த
நி விதையாய்
இன்றுதான் விழுந்தாயே
பூமித்தாயின் மடியில்
திரும்பவும்
சந்திக்கும் சந்தர்ப்பம்
கிடைத்தால் சொல்லிவைக்கிறேன்
பிரம்மனிடம்
நண்பர்களாகவே
பிறக்கவேண்டும்
இன்னும் ஒருமுறை..........
செந்தில்குமார்.ப
இன்று பிறந்தநாள் கொண்டாடும்
எனது நண்பனுக்காக வாழ்த்து(ங்)கள்....
இப்படி ஒரு நட்பு எனக்கும் இருந்திருக்கிறது செந்தில்
ReplyDeleteநல்லா இருக்கு செந்தில்.. வாழ்த்துக்கள் :)
ReplyDeleteகவிதையாய் உங்கள் இனிய கடந்த காலங்களை பகிர்ந்து விட்டீர்கள் விரைவில் நண்பரை சந்திக்க வாழ்த்துக்கள்.. உங்கள் நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteகே.ஆர்.பி.செந்தில்
ReplyDeleteஆனந்தி
தமிழரசி
வருகைதந்து வாழ்த்திய நெஞ்சங்களுக்கு
நன்றிகளுடன் செந்தில்குமார்.அ.வெ
நல்ல நட்பு. நண்பருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பர் ஸ்ரீராம்.....
ReplyDelete