Tuesday, April 20, 2010

செலவாகிபோன நாட்கள்........



என்னவன்


அம்மா சோப்பு
என்றால் அது ஏனடா
கேட்குது என்வீட்டு வாசல் வரை
நான் கேட்பேன் என்றா
காய்கறிகாரனிடம்
என்னடா கடலை உனக்கு
போகவிடு அவனை
போய்விடும் வாடிக்கை
நான் வாசலிலே நிற்கிறேன்
நீ வேலைக்கு போகும் வரை............


அம்பு ( அன்பு )


எத்தனை அம்புகள்
என் வீட்டு ஜன்னலில்
ஜயோ பாவம்
லேசான காயம்
என் ஜன்னலின்
கதவுக்கு
நான் தப்பித்தேன்
காயம் ஏதும் இன்றி..........


இன்று ஞாபக வலி


அர்த்தங்கள்
ஆயிரம் சொல்லியிம்
விளங்கவில்லை
அந்நாளில் உனக்கு
நான் வீட்டுக்கு வெளியே.............




Tamilish

Thursday, April 8, 2010

சில நொடிகளின் சிந்தனை............





கல்லறை

அங்கே நானும்
தூங்க ஆசை
இறந்தபின்பு அல்ல
இப்போதே....



காதல்

முத்தமிழின் கூட்டு


கனவு

இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
எல்லாம் இங்கே
இறந்துபோன காலம்....



தூரத்தில் அவன்


நினைத்தால்
அனைத்துக்கொள்வேன்
உன்னை என் மார்போடு
தலையணையாய்
நிலா சோறுகூட
நீ போட்டுத்தான்
போயிருக்கிறது என் இரவுகள்
நெற்றி பொட்டில்
நீ இட்ட முத்த வடு
இன்னும் கூட இருக்கு
நீ எங்க போன
இப்ப ஒரு முத்தம் வேணும் எனக்கு......



வயோதிகன்


தோழிகளுடன்
கைகோத்து நான்
போன தொடுவானமெல்லாம்
தோன்றி தோன்றி
மறையுது இன்று
ஏனோ
அவள் தோற்றம்
மங்கலாய்
நான் முதுமையை எட்டிவிட்டேனோ......?

Thursday, April 1, 2010

நீண்ட நாள் ஆசை........





மீண்டும் என் தாய் மடியில் தலைவைத்து துயில...

நான் பிறந்ததை மறுமுறை என் தாய் சொல்லி கேட்க..

தந்தையோடு தயக்கம் இல்லாமல் பேச...

பால்ய வயது தோழிகளை தேடி செல்ல...



பணம் கொஞ்சம் சேர்த்து பனி உறையும் தேசத்தை காண...

அர்த்தஜாமத்தில் நடந்து ஆற்றங்கரை செல்ல...

மலர்கள் பூத்துக்குழுங்கும் சோலையில் தனிமையில் கிடக்க...

பற்றாகுறை இல்லாமல் வாழ்க்கை பயணத்தை தொடர...



என்னவளுடன் கடற்கரை மணலில் கைகோர்த்து நடக்க...

அவள் காலடிதடத்தை நீண்ட தூரத்தில் நின்று காண...

அதிகாலை விடியலை அனுதினம் அவளுடன் ரசிக்க...

என்மார்பு வலிக்க தங்ககிள்ளைகள் நடமாட...