
கல்லறை
அங்கே நானும்
தூங்க ஆசை
இறந்தபின்பு அல்ல
இப்போதே....
காதல்
முத்தமிழின் கூட்டு
கனவு
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
எல்லாம் இங்கே
இறந்துபோன காலம்....
தூரத்தில் அவன்
நினைத்தால்
அனைத்துக்கொள்வேன்
உன்னை என் மார்போடு
தலையணையாய்
நிலா சோறுகூட
நீ போட்டுத்தான்
போயிருக்கிறது என் இரவுகள்
நெற்றி பொட்டில்
நீ இட்ட முத்த வடு
இன்னும் கூட இருக்கு
நீ எங்க போன
இப்ப ஒரு முத்தம் வேணும் எனக்கு......
வயோதிகன்
தோழிகளுடன்
கைகோத்து நான்
போன தொடுவானமெல்லாம்
தோன்றி தோன்றி
மறையுது இன்று
ஏனோ
அவள் தோற்றம்
மங்கலாய்
நான் முதுமையை எட்டிவிட்டேனோ......?
உங்கள் வருகைக்கு நன்றி
ReplyDeleteதமிழினி
அப்படியே ஆகட்டும்....
kavithai super a irukku!
ReplyDeleteவருகைக்கு நன்றி......
ReplyDeleteமெல்லினமே மெல்லினமே
ஆதரவு தொடரட்டும்....