Friday, May 28, 2010

வசந்தகாலத்தின் வலிகள்


முதல் பூசை(ஜை)

நாலு வயல்
நாத்து நட்டு காத்திருப்பான்
என் பாட்டன் பசியேடு
பாட்டி சோறு
கொடுத்துவிடுவா
என்கிட்டே அப்படின்னு

ஆத்தை கடந்து
போகும் போது பாத்து
போங்கன்னு சொல்லிவிடுவா

ஆத்துல கால
வச்சதும் போயிடும் அரமனசு
தண்ணியேடு
அதில் ஓடும் மீன
பாத்ததும் முழு
மனசும் போய்டும் மீன் புடிக்க

பொழுது போவது
தெரியாம நாங்க பிடிச்சி
விட்டிருப்போம்
ஒரு கூட மீன
என் அண்ணன் சொல்லுவான்
போதுண்டா போலாம்னு
பயபுல்ல நம்ம யாறு சொல்லி
கேட்டிருக்கோம்
கொஞ்சநேரத்துல
எலெய்ய்ய்ய்ய்...........செந்திலூ.....
சத்தம் போட்டு
வந்தா என் பாட்டி
கொடுத்த ரெண்டுவாட்டி
வாதமடக்கி
குச்சியெடுச்சி

இப்பக்கூட
லேசா வலிக்குது
அதை என்னி
நினைச்சிபாக்கும் போது....


டிஸ்கி:-வலிகளின் வடுக்கள் நேற்று இரவு நீண்ட நேரமாக தழும்புகளை வருடியதால் வந்த வரிகள்

என் வலிகள் எல்லோரையிம் சென்றடைய உங்கள் உரிமையை இங்கே பகிர்ந்துகொள்ளவும்

7 comments:

  1. மனதை வருடும் கவிதை ....
    மீண்டும் என் கிராமத்துக்கு கூட்டிச்சென்று விட்டது..

    ReplyDelete
  2. நன்றி

    கே.ஆர்.பி.செந்தில்

    முதல் வருகைக்கும் கருத்துக்கும்

    ReplyDelete
  3. நல்லாயிருக்கே கவிதை..

    ReplyDelete
  4. செந்தில் சூப்பர் சொன்னாக்கூட வலிக்குமோ.. சும்மா சும்மா..
    விருது கொடுத்துயிருக்கேன் வந்து வாங்கிக்கோங்க..http://niroodai.blogspot.com/2010/06/blog-post_02.html

    ReplyDelete
  5. நன்றி

    அஹமது இர்ஷாத்

    முதல் வருகைக்கு

    சென்தில்குமார்.அ.வெ

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.