Wednesday, June 30, 2010

காதல் பேருந்து...

கூட்ட
நெரிசலில்
தொங்குகிறேன் நான் ...

உன்னையும் தான்
என்னை காதலிப்பாயா..?

நான்
கைவிட்டால்
இறந்து வாழ்வேன்
நீ கை விரித்தால்
வாழ்ந்துகொண்டே சாவேன்...

காதல் பேருந்தில்
கசங்கி புழுங்குது
என் கனத்த மனசு
ஒருதலையாய்
உன்னை நினைத்து....




டிஸ்கி:-
என்னவே நான் மட்டும்தான் அவள் போகும் இந்த பேருந்தில் செல்வது போல நினைத்ததால் வந்த வரிகள் உண்மையா அப்படின்னு கேள்வியெல்லாம் கேக்ககூடாது....சரியா




இது உங்கள் இடம் ம்ம்ம்ம் பூந்து விளையாடுங்க ஆனா சரியா காதல் பேருந்துதான அப்படின்னு பாத்து குத்தனும் சொல்லிட்டேன்.இல்லையினா வண்டி நிறுத்ததில் நிக்காமல் போய்விடும். ஒகே வா...


Sunday, June 20, 2010

என்னமோ ஆயிடுச்சி அதனாலதான் இப்படி எப்புடி..

சந்திரன்

என் தனிமையில்
நீ மட்டும்
துணையாய்
ஏன் ?

அவ்வளவு இரக்கமா
உனக்கு என் மீது

அவளை விட !!!

சத்தம்

தூக்கு கயிறுக்கு
முத்தமிட்டேன்
ஏன் தெரியிமா ?

என்னை
தூக்கிலிட அவள்
சத்தம் போட்டாள்....

நேற்று

காலையில்
ஒரே கூட்டம்
தெருவில்

கோவில் தங்க
நகையை காணவில்லை
என்று...

நானும் அதையேத்தான்
சொன்னேன்
எங்க தங்கத்தை காணவில்லையென்று....

நிறம்னு சொல்றாங்க...

கண்ணாமூச்சு
ஆடலாம் வா என்றாள்

கண்ணை கட்டி
சுற்றினாள்
என் உலகமே கார்நீலமானது
அவளையும் சேர்த்து......


வெடிக்கும்

கல்லறைக்குள்
போயினும்
என் இருதயம் துடிக்கும்
உன்னை நினைத்து

நீ மட்டும்
துடித்துவிடாதே
வெடித்துவிடும் என் இருதயம்....


என்னமோ போங்க

தானம் கொடுத்தமாடு
தாடி களைந்த துறவி
துளிர்விடாத மரம்
துணையில்லாத நான்...



எல்லா தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.....
அப்பா இப்ப நீ எங்க இருக்க இந்தா என் முத்தம் உனக்கு


டிஸ்கி:- எல்லாம் ஒரே பிதற்றல் அவ்வளவுதான் மத்தபடி ஒன்னும் இல்ல

டிஸ்கி:- நேற்று எங்க ஆலுங்கள நாங்கலே எப்புடி



என்னகோபம் இருந்தாலும் உக்காந்து பேசலாம் ஆனா உங்க ஓட்டை நீங்கதான் போடனும். அங்க பாருங்க ஒருத்தன் கண்ணாமூடிக்கிட்டு குத்தி
என்னோட பிதற்றல் யாரையிம் போய் சேராம பன்னிடுவான் போலிருக்கே

Saturday, June 19, 2010

இரவு நேர உளறல்



நன்றி கூகுல்







இரவு
நேரக்கிளியே
சத்தம் போடாதே....


இது நிலவு
காயும்நேரம்



இமைமூடி
உளறுகிறாள் என்
இளைய செல்லம்...


கொஞ்சமா
கொஞ்சு கிளியே
உன் செல்லத்தை
கோபம் கொள்ளாம
என் மீது.....






உங்களுக்கும் இந்த கிளியின் சத்தம் கேட்டிருந்தால் மறக்காமல் உங்கள் உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் குத்தி செல்லவும்


Saturday, June 12, 2010

ஜுரம் வந்தால்தான் தெரியிம்

கடந்த முன்று நாட்களாக ஒன்னுமே முடியல எல்லாம் இந்த காய்ச்சல் தான். திடிரென்று பரவி இப்பொது அமீரகத்தில் தலைகாட்ட துடைங்கி உள்ளது. எல்லாரும் உஷார். சீக்கிரம் பக்கதில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உங்கள் இரத்தத்தை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
ஏன் இதை இங்கே எழுதுகிரென் என்றால் அவ்வளவும் அனுபவம். பட்டாதான் தெரியிம் அப்படின்னு சொல்லுவாங்க.
கடந்த மூன்று நாள் அய்யே !!! அம்மா !!! என்று அமீரகத்தில் நான் உலரியதை என் தாய் கேட்டிருந்தால் இரத்தகண்ணிர் வடித்திருப்பாள். அவ்வளவு கஸ்டம். இது ஒருவகையான வைரஸ் காச்சல் என்று மருத்துவர்கள் சொல்கிரார்கள்.
கட கட என எல்லாரையிம் பற்றி தோற்றி ஆதிக்கம் செய்துவிடும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் காச்சல் என மருத்துவர்கள் விளக்கம் சொல்கிரார்கள்.
எனக்கு தெரிந்தவரை எங்களுடைய கம்பெனியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சுமார் 18 தொழிலாளர்களை புதிதாக அழைத்து வந்தார்கள்.
அதர்க்கு பின்பு தான் காச்சல் ஆரம்பம் ஆனது. ஒருவர் பின் ஒருவராக எங்கள் விடுதியில் உள்ளவர்களுக்கு காச்சல் வர ஆரம்பித்து விட்டது. நான் மட்டும் என்ன விதிவிளக்கா.எனக்கும் அந்த வைரஸ் காச்சல் வந்துவிட்டது.
பின்பு எனக்கு சிரிய சந்தேகம் எந்த அளவிற்கு உண்மை என அறிய இன்று காலை தொலைபேசியில் என் அண்ணனை தொடர்பு கொண்டு விபரத்தை சொன்னேன். பதிளுக்கு அவன் ஆம் கேரளாவில் இப்போது பன்றி காச்சல் பரவிக்கொண்டிருக்கு நீ உடல் நலத்தை கவனித்துக்கொள் என்று சொல்லி முடித்தான் என் அண்ணன்.
சற்று தாமதமாக நான் இந்த தகவலை வெளியிடுகிரென் என்று நினைக்கும் போது சிறு வருத்தம் கூட என்ன செய்ய இன்றுதான் என்னால் சராசரி வாழ்க்கைக்கு திரும்பமுடிந்தது.
என்ன என்ன நடக்கும் இந்த காச்சல் வந்தால்
முதுகு தண்டுவடம், கை, கால்,கழுத்து இவை அனைத்தும் இனையிம் பகுதி அதாவது (JOINT) தாங்க முடியாத வலி ஏற்படும்.
முழுமையாக அதாவது வயிறு நிறையிம் அளவுக்கு உங்களால் உணவு உட்கொள்ள முடியாது.
தண்ணிர் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும். தண்ணிர் குடித்துக்கொண்டே இருந்தால் வாந்தி வந்துவிடும்
வாய் எப்போதும் கசப்பு சுவையை சுவைத்துக்கொண்டே இருக்கும்.
என்ன செய்யவேண்டும் இந்த காச்சல் உங்களை பற்றிக்கொண்டால்
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அனுகி ஒன்று அல்லது இரண்டு பாட்டில் குலுக்கோஸ் ஏற்றிக்கொள்ளவும்.
மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றவும்.
ரசம் சாதமும் , கஞ்சி சோறும் இதமான உணவு.
பால், பிரட் எல்லாம் நிறைய எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
உங்கள் யாருக்கும் இந்த வைரஸ் பற்றி தோற்றி ஆதிக்கம் செலுத்தவில்லை என்றால். சுகந்திர உரிமையை இங்கே பகிர்ந்துகொள்ளவும்