Sunday, June 20, 2010

என்னமோ ஆயிடுச்சி அதனாலதான் இப்படி எப்புடி..

சந்திரன்

என் தனிமையில்
நீ மட்டும்
துணையாய்
ஏன் ?

அவ்வளவு இரக்கமா
உனக்கு என் மீது

அவளை விட !!!

சத்தம்

தூக்கு கயிறுக்கு
முத்தமிட்டேன்
ஏன் தெரியிமா ?

என்னை
தூக்கிலிட அவள்
சத்தம் போட்டாள்....

நேற்று

காலையில்
ஒரே கூட்டம்
தெருவில்

கோவில் தங்க
நகையை காணவில்லை
என்று...

நானும் அதையேத்தான்
சொன்னேன்
எங்க தங்கத்தை காணவில்லையென்று....

நிறம்னு சொல்றாங்க...

கண்ணாமூச்சு
ஆடலாம் வா என்றாள்

கண்ணை கட்டி
சுற்றினாள்
என் உலகமே கார்நீலமானது
அவளையும் சேர்த்து......


வெடிக்கும்

கல்லறைக்குள்
போயினும்
என் இருதயம் துடிக்கும்
உன்னை நினைத்து

நீ மட்டும்
துடித்துவிடாதே
வெடித்துவிடும் என் இருதயம்....


என்னமோ போங்க

தானம் கொடுத்தமாடு
தாடி களைந்த துறவி
துளிர்விடாத மரம்
துணையில்லாத நான்...



எல்லா தந்தையர்களுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.....
அப்பா இப்ப நீ எங்க இருக்க இந்தா என் முத்தம் உனக்கு


டிஸ்கி:- எல்லாம் ஒரே பிதற்றல் அவ்வளவுதான் மத்தபடி ஒன்னும் இல்ல

டிஸ்கி:- நேற்று எங்க ஆலுங்கள நாங்கலே எப்புடி



என்னகோபம் இருந்தாலும் உக்காந்து பேசலாம் ஆனா உங்க ஓட்டை நீங்கதான் போடனும். அங்க பாருங்க ஒருத்தன் கண்ணாமூடிக்கிட்டு குத்தி
என்னோட பிதற்றல் யாரையிம் போய் சேராம பன்னிடுவான் போலிருக்கே

14 comments:

  1. கவிதை நல்லாயிருக்கு.தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  2. டிஸ்கி:- எல்லாம் ஒரே பிதற்றல் அவ்வளவுதான் மத்தபடி ஒன்னும் இல்ல


    ..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,... இதுக்கு மேல என்ன சொல்றது?

    ReplyDelete
  3. வணக்கம் செந்தில்

    என்ன பிதற்றல் - னு போட்டுட்டு புலம்பறீங்க.

    கவிதையில் தந்தையை பற்றியும் எழுதி இருந்தால் தந்தையர் தினத்திற்கு பொருந்தும்.

    இராஜராஜன்

    ReplyDelete
  4. asiya omar said...
    கவிதை நல்லாயிருக்கு.தொடர்ந்து எழுதுங்க.

    முதல் வருகைக்கு நன்றி asiya omar

    ReplyDelete
  5. Chitra said...
    டிஸ்கி:- எல்லாம் ஒரே பிதற்றல் அவ்வளவுதான் மத்தபடி ஒன்னும் இல்ல


    ..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,... இதுக்கு மேல என்ன சொல்றது?


    வாங்க சித்ரா
    எதாவது சொல்லனும்ல
    வந்துட்டு சும்மா போனா எப்படி சித்ரா....

    ReplyDelete
  6. வனம் said...
    வணக்கம் செந்தில்

    என்ன பிதற்றல் - னு போட்டுட்டு புலம்பறீங்க.

    கவிதையில் தந்தையை பற்றியும் எழுதி இருந்தால் தந்தையர் தினத்திற்கு பொருந்தும்.

    இராஜராஜன்

    வணக்கம் ராஜன்
    எனது பதிவு குடிசை உங்களை வரவேற்கிரது

    நிறைய பேசனும்
    நிறைய கேக்கனும் உங்ககிட்ட‌

    வாழ்க்கையே புல‌ம்ப‌ல்தான் ....

    ReplyDelete
  7. நன்றி...!

    மற்ற கவிதைகளும் அருமை...

    ஆனால்..
    படித்ததில்
    பிடித்தது....
    பாதித்தது....

    /// என் தனிமையில்... நீ மட்டும் துணையாய் ஏன் ?
    அவ்வளவு இரக்கமா? உனக்கு என் மீது
    அவளை விட ///

    நல்ல அழகான வரிகள்... suerp!

    வாழ்த்துக்கள்...

    நட்புடன்..
    காஞ்சி முரளி...

    ReplyDelete
  8. வாங்க காஞ்சி முரளி வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. //கல்லரைக்குள்
    போயினும்
    என் இருதயம் துடிக்கும்
    உன்னை நினைத்து

    நீ மட்டும்
    துடித்துவிடாதே
    வெடித்துவிடும் என் இருதயம்....//

    ரொம்ப நல்லா இருக்குங்க.. :)

    //என்னமோ போங்க

    தானம் கொடுத்தமாடு
    தாடி களைந்த துரவி
    துளிர்விடாத மரம்
    துணையில்லாத நான்... //


    ஹ்ம்ம்..கவலை படாதீங்க..
    சீக்கிரம் துணை ப்ராப்தி ரஸ்து.. :-)))

    அப்புறம்.. துறவி / துரவி ..ரெண்டில் எது சரி..??

    ReplyDelete
  10. நல்லாருக்குங்க

    ReplyDelete
  11. நல்ல கவிதைகள். வாழ்த்துக்கள். வார்த்தைகளை கொஞ்சம் கவனிக்கலாமே? (கயிறுக்கு.. அவளையும்.. கல்லறை.. துறவி..)
    -கே.பி.ஜனா

    ReplyDelete
  12. வாங்க ஆனந்தி
    வருகைக்கு நன்றி

    மாற்றிவிட்டேன் துறவி தான்
    நன்றிகள்

    கே.ஆர்.பி.செந்தில் said...
    நல்லாருக்குங்க

    நன்றி கே.ஆர்.பி.செந்தில்...

    K.B.JANARTHANAN said...
    நல்ல கவிதைகள். வாழ்த்துக்கள். வார்த்தைகளை கொஞ்சம் கவனிக்கலாமே? (கயிறுக்கு.. அவளையும்.. கல்லறை.. துறவி..)
    -கே.பி.ஜனா

    வாங்க கே.பி.ஜனா ...

    நன்றிகள் பல
    என்னை இன்னும் நான் செம்மை படுத்திக்கொள்கிரேன்...

    மாற்றிவிட்டேன்

    ReplyDelete
  13. செந்தில் கவிதை அருமை.
    படித்தில் பிடித்ததென்றாலும் அதை பிறக்கும் பிடிகச்செய்வது அதைவிட அருமை.

    ReplyDelete
  14. வாங்க ...

    அன்புடன் மலிக்கா

    செந்தில் கவிதை அருமை.
    படித்தில் பிடித்ததென்றாலும் அதை பிறக்கும் பிடிகச்செய்வது அதைவிட அருமை.

    பொருள்
    பிறர்க்கும் பிடிக்க செய்வதுதானே மல்லிக்கா ...
    என்று நினக்கிரேன் கவனித்துவிட்டேன் கவனிங்க‌

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்.